முதுமைக்கால மருத்துவ அவசரம் - தயார்நிலை சரிபார்ப்பு பட்டியல்
முதுமை காலமும் அவசர நிலையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பவை. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது தவிர்க்க முடியாதது. இதனால் 60 வது வயது பிறந்தநாளை கொண்டாடும் ஒருவர் அவசரநிலையை சந்திக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் ஒருவருடைய வயது அதிகரிக்கும் போது, உடல் உயிரணுக்கள் மற்றும் உடலின் திறன்களில் மெதுவான சரிவு காணப்படுகிறது. இந்த சரிவு சில வயதானவர்களிடம் ஆழமானதாக காணப்படும். அனால் ஒரு சிலருக்கு இந்த தளர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இந்த உடல் சோர்வு கண்டு பயப்பட வேண்டியதில்லை எனினும், கவனமாக இருப்பது மிக அவசியம்.
ஒருவருடைய முதுமை காலத்தில் உடல் இயக்கம் மற்றும் புலன்கள் சார்ந்த உணர்ச்சிகள் குறைகிறது. பொதுவாக வயதானவர்களுக்கு நாள்பட்ட சுகாதார நோய்கள் அதிகம் இருக்கக்கூடும். முதுமை நெருங்கும்பொழுது, ஒரு வலிமையான ஆரோக்கியமான உடல் பலவீனமடைந்து அனைத்து வகையான ஆபத்துக்களுக்கும் ஆளாகக்கூடியது இயல்பே. மூத்தவர்கள் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை தவிர்க்க முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதே சிறந்த தீர்வு.
முதுவயது அவசர கால ஆயத்தம் என்றால் என்ன?
முதியோருக்கான அவசரகால ஆயத்தமானது, அவசரநிலைகளை திறம்பட கையாள அவர்களுக்கு உதவும் வகையில், முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு சற்று முன்னறிவு தேவைப்படுகிறது. இருப்பினும், அவசரகால தயார்நிலை முதியவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களை தயார்படுத்துகிறது.
அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் முக்கியமானது?
இதற்கான பதில் எளிது. இது முதியவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உதவுகிறது. அவசரகாலத்தை கையாள்வது பற்றி உங்கள் அன்பிற்குரிய முதியவர்களுக்கு பயிற்சி அளிப்பது, அத்தருணங்களில் பீதிக்கு உள்ளாகாமல் தக்க உதவி பெறுவதை உறுதி செய்கிறது. கூடுதலாக, அவசரகாலத் தயார்நிலையில் இருப்பது தனியாக வாழும் முதியோரின் தன்னம்பிக்கையையும், விபத்துக்களால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
மூத்தவர்களுக்கான அவசரகால தயார்நிலை - பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
உங்கள் வீட்டிலுள்ள மூத்தவர்களுக்கு எந்த நேரத்திலும் அவசரநிலைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கள் அவசரகால தயார்நிலை பட்டியலில் மூத்தவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் முக்கியமான மற்றும் எளிமையான விஷயங்கள் உள்ளன.
அவசரகால மருத்துவ பெட்டகங்கள் (எமெர்ஜென்சி மெடிக்கல் கிட்) உடன் வைத்திருங்கள்.
அவசரகால மருத்துவ பெட்டி அவசியம் இருக்க வேண்டும். நாங்கள் பரிந்துரை செய்யும் இந்த மருந்து பெட்டி, சில பேண்ட்- எய்டுகள், அவசர தேவைக்குரிய சில மாத்திரைகள் மற்றும் களிம்புகள் உள்ளடக்கிய பெட்டியை விட மேலானது. முதியவர்களுக்கான மருத்துவ அவசர கிட் இல் வைத்திருக்க வேண்டியவை
இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கும் கருவிகள், கூடுதல் ஜோடி கண்ணாடிகள், பொய்ப்பல் வகைகள், காதில் பொருத்தும் கேட்கும் கருவிகள் மற்றும் பேட்டரி உபகரணங்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
3 - 6 நாட்களுக்கு தேவைப்படும் முக்கியமான மருந்துகள், மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர் மற்றும் அவர்களது மருத்துவர் பரிந்துரைக்கும் பிற முக்கியமான உயிர் காக்கும் மருந்துகள் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவ பதிவுகளின் நகல்கள், மருத்துவர் அல்லது மருத்துவமனை அவசர எண்கள், மருத்துவ காப்பீட்டு விவரங்கள், மருந்து ஒவ்வாமைகளின் பட்டியல் ஏதேனும் இருந்தால் அவற்றையும் உடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஆதரவு வலையமைப்பு கொண்டிருக்க வேண்டும்:
தனியாக வசிக்கும் மூத்தவர்கள், அவசர காலங்களில் உதவி கோர மற்றும் அருகில் வசிக்கும் பிற குடும்ப உறுப்பினர்களின் நம்பகமான ஆதரவு வலையமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். தங்கள் முதுமையான பெற்றோருக்கும் இதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பொறுப்புள்ள பிள்ளைகளின் கடமையாகும். இந்த ஆதரவு வலையமைப்பு அனைவருக்கும் முக்கியமானது, ஏனென்றால் அவசரநிலை ஏற்படும் போது நீங்கள் எப்போதும் அருகில் துணையுடன் இருக்க வாய்ப்பில்லை. எனவே கூடுதலாக, ஆதரவு வலையமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பு எண்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ சாதனங்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இதையும் படிக்க: சுய பராமரிப்பு: தம்மை தாமே கவனித்துக் கொள்ளும் கலை
அவசர தொடர்பு பட்டியலை உருவாக்கவும்:
அருகிலுள்ள மருத்துவமனைகள், குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்களின் தொலைபேசி எண்களின் பட்டியலை உருவாக்குவது அவசியம். இந்த எண்கள் அனைத்தும் தொலைபேசியில் சேமிக்கப்பட்டு பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்பட வேண்டும். எண்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவைகள் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்.
பீதி அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்:
மூத்தவர்களுக்கான அவசரகால தயார்நிலையின் மற்றொரு முக்கியமான அம்சம், இதுபோன்ற நிலை ஏற்படும் போது வயதானவர்களும், பிற குடும்ப உறுப்பினர்களும் அமைதியாக இருக்க பயிற்சி அளிப்பது ஆகும். குழப்பமும் கண்டிப்பாக செயல்பாட்டினை மோசமாக்கும், தாமதப்படுத்தும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அவசரகால தேவைகளுக்கு தொழில்நுட்பம் எவ்வாறு உதவும்?
தற்பொழுது இருக்கும் முதியவர்கள் அதிஷ்டசாலிகள் என்றே கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களது ஆயுட்காலத்தில் தொழில்நுட்பம் உண்மையில் வெகுதூரம் வளர்ந்துள்ளது. முதியவர்களின் அவசரகால தயார் நிலைக்கு உதவக்கூடிய சில தொழில்நுட்ப உதவிகளைப் பற்றி இங்கே பார்ப்போம். அவசரநிலையைத் தடுக்க உதவும் தொழில்நுட்பங்கள் தற்காலத்தில் பல உள்ளன. அவற்றை பற்றி கீழே காண்போம்.
ஜி.பி.எஸ் டிராக்கர்:
வீட்டில் இருந்து தொலைந்து போன ஒரு மூத்த நபரை கண்டுபிடிக்க ஜி.பி.எஸ் கருவி உதவியாக இருக்கும். குறிப்பாக முதுமை காலத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்ககளைக் கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கும். வீட்டில் உள்ள ஒரு வயது வந்த நபர் வெளியே சென்று 24 மணி நேரத்திற்குள் திரும்பவில்லை என்றால், அதில் குறைந்தது 50% பேர் கடுமையான காயம் அல்லது மரணத்திற்கு கூட ஆளாக நேரிடும் என்று அல்சைமர் சங்க ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எனவே இந்த வகை கருவிகள் அவர்களை கண்டறிய உதவியாக இருக்கும்.
கேமராக்கள் / மோஷன் சென்சார்கள்:
வாழும் இடத்திற்குள் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் அல்லது மோஷன் சென்சார்கள் உடல் அல்லது மனநல பிரச்சினைகள் உள்ள மூத்தவர்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் அவர்களின் நடத்தை முறைகளை அறிந்து கொள்ளவும் உதவும். நவீன கால சென்சார்கள் போக்குகளில் மாற்றங்களைக் கண்டறிந்து பராமரிப்பாளர்களை முறையாக எச்சரிக்கும் அளவிற்கு அதிநவீனமானவையாக இருக்கின்றன.
எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் (ஈ.ஆர்.எஸ்):
தனியாக தங்கியிருக்கும் எந்தவொரு வயதான பெரியவரிடமும் தனிப்பட்ட அவசரகால ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இருக்க வேண்டும். இந்த சிறியதான / அணியக்கூடிய சாதனத்தை அணிந்திருப்பவர் ஒரு பொத்தானைத் தொடும் போது SOS சமிக்ஞைகளை அனுப்ப உதவுகிறது. இதன் விளைவாக, மூத்தவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஈ.ஆர்.எஸ் அவசரகாலத்தில் உதவும் ஒரு பாதுகாப்பான கருவி என உறுதியாக நம்பலாம்.
REAN ஃபவுண்டேஷன் உடன் உங்கள் முதியோர் பராமரிப்பை மேம்படுத்தவும்:
மூத்தவர்களுக்கான அவசரகால தயார்நிலை பட்டியலில் சேர்க்க ஒரு சிறந்த தீர்வை REAN ஃபவுண்டேஷன் உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் வயதான அன்புக்குரியவர்களுடன் மெய்நிகர் தொடர்பு மூலம் உங்கள் வீட்டின் வசதியிலிருந்து தரமான பராமரிப்பை வழங்கும் ஒரு ஸ்மார்ட் தளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். மூத்த குடிமக்கள் தினசரி பராமரிப்பு நடவடிக்கைகளை திறம்பட நிர்வகிக்கவும் மருத்துவ அவசரநிலைகளுக்கு சிறந்த முறையில் தயாராகும் விதத்திலும் REAN HEALTH GURU தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் அறிய, எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.